யாழ் வைத்தியசாலையில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அங்கஜன் எம்.பி!

யாழ்ப்பாணம் – போதனா வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் திடீர் பயணத்தினை மேற்கொண்டு பணிப்பாளர் Dr சத்தியமூர்த்தியினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலினை அடுத்து இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்

அவர் தெரிவித்ததாவது ;

தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையின் Dr .சத்தியமூர்த்தியினை சந்தித்திருந்தேன். தற்போது இருக்கின்ற தேவைப்பாடுகள் ,குறைபாடுகள் சம்மந்தமாக கலந்துரையாடியிருந்தோம்.

வைத்திய சேவை உதவியாளர்களின் பற்றாக்குறை மற்றும் அதற்கான வெற்றிடங்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம் .யாழ் .மாவட்டத்தின் முக்கியமான வைத்தியசாலை என்ற அடிப்படையில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அருகில் காணக்கூடிய வெற்று நிலங்களை இந்த போதனா வைத்தியசாலையினுடன் இணைக்கக்கூடிய தேவைப்பாட்டினை தொடர்பாகவும் உரையாடியிருந்தோம்.

எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக Dr .சத்தியமூர்த்தி கூறியிருந்தார்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply