நாட்டில் ஒரு வாரத்தில் ஆயிரத்தை கடந்த டெங்கு வழக்குகள்!

கடந்த வாரத்தில் 1590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 50.8% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

56 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அக்குரணை, மாத்தளை மாநகர சபையின் அதிகார வரம்பு, அம்பலாங்கொட, வாரியபொல, அஹெலியகொட, அம்பிலிபிட்டிய மற்றும் கலிகாமு ஆகியன புதிதாக இணைந்த வைத்திய அதிகாரி பிரிவுகளாகும்.

இந்த வருடத்தில் இதுவரை 50,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply