யாழ் வைத்தியசாலையில் தற்போது மருந்து தட்டுப்பாடு சீரடைந்துள்ளது- பணிப்பாளர் கருத்து!

யாழ்ப்பாணம் – போதனா வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr சத்தியமூர்த்தியினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இது தொடர்பாக Dr .சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ;

பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் அங்கஜன் இராமநாதன் யாழ் .போதனா விஜயம் மேற்கொண்டு வைத்திய சேவை மற்றும் நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்திருந்தார்.

இங்கு தேவைப்படுகின்ற ஆளணி அதிகரிப்பு ,புதிதாக கட்டி முடிக்கக்கூடிய சில கட்டடங்களுடைய நிலைமைகள் தொடர்பாகவும் அவருக்கு எடுத்து கூறியிருந்தேன்.

எமது வைத்தியசாலையின் உள் பகுதியிலே சில கட்டடங்களை கட்ட வேண்டியுள்ளது. அதில் குறிப்பாக மகப்பேற்று விடுதியினை அவசரமாக கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.அதற்கான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தோம்.

இவை தவிர வைத்தியசாலையின் நீண்ட கால நோக்கத்தில் பல கட்டட வேலைகளையும் ,பல சேவைகளையும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் அவருடன் கலந்துரையாடியிருந்தேன்.

ஆகவே தற்போது வைத்தியசாலை தற்போது நிலவுகின்ற ,அவசரமாக தேவைப்படுகின்ற உதவிகள் குறித்தும் கேட்டிருந்தேன் .அதற்கு உரிய அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர் உதவுவதாக கூறியிருந்தார்.என்றார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் மருத்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் நிலமை எவ்வாறு என ஊடகவியலாளர் கேட்ட வினாக்கு Dr .சத்தியமூர்த்தி பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

தற்போது ஓரளவிற்கு மருந்து கையிருப்பில் இருக்கின்றன.இது கடந்த காலங்களில் மத்திய அமைச்சு மற்றும் ,சில கொடையாளிகளிடமிருந்தும் நன்கொடையாக பெறப்பட்டிருந்தது.

குறிப்பாக இந்திய அரசிடம் இருந்து 2 தடவைகள் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவை தவிர வெளிநாடுகளில் இருக்கின்ற நிறுவனங்களும் ,தனிப்பட்ட நன்கொடையாளர்களும் மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.

எனவே தற்போது வைத்தியசாலையில் மருந்துகள் இருக்கின்றன.அவ்வவ்போது மருந்துகள் தேவைப்படுகின்ற பொழுது நேரடியாக தனியார் மருந்தகங்களில் பெற்று வழங்குகின்ற செயற்பாடுகளையும் செய்கின்றோம்.ஆகவே தற்போது மருத்துத் தட்டுப்பாடு ஓளரவிற்கு சீரடைந்துள்ளது.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply