கோட்டாபய இலங்கை வருவார்: திகதியை அறிவித்தார் உதயங்க !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

மக்கள் போராட்டத்தை அடுத்து மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூரிற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply