பாண்டிருப்பில் இந்த துண்டு வீதி மட்டும் ஏன் போடப்படவில்லை?

பாண்டிருப்பில் உள்ள மக்கள் இதிகம் பயன்படுத்தும் பிரதானமான வீதிகளில் ஒன்றான மாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை நோக்கிச் செல்லும் வீதியில் குறித்த ஒரு துண்டு வீதி மட்டும் (140m வீதி மட்டும்) செப்பனிடப்படாமல் உள்ளது.

தற்போது மழைகாலம் என்பதால் குறித்த வீதியின் பகுதி சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த வீதி பாண்டிருப்பு கடற்கரை, பாண்டிருப்பு மயானம் என்பவை அமைந்திருப்பதாலும் குறித்த வீதியினூடாகவே பாண்டிருப்பில் இருக்கின்ற சிவன் ஆலயம் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கும் இந்த வீதியூடாகவும் மக்கள் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த வீதியிலுள்ள 140m பகுதியை செப்பனிட்டு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த வீதியின் இந்த 140m துண்டு மட்டும் ஏன் இதுவரை செப்பனிடப்படவில்லை? இதற்கு யார் பொறுப்பு என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

Leave a Reply