மக்களுக்கான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிட்டால் பங்காளிக் கட்சிகளுக்கு மாற்று வழியை நாட வேண்டிவரும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு முன்னர் பங்காளிக் கட்சிகளுக்கு இந்த அரசு பல உறுதிமொழிகளை வழங்கியது. அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்னும் சாதாரண எம்.பியாகவே இருக்கின்றேன்.
எனவே, மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் மாற்று வழியை நாடுவோம்.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல்களுக்கு எம்மையும் அழைக்க வேண்டும்.
மக்களின் பிரச்சினை, நாட்டின் பொருளாதார பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தில் இருக்கும் 11 பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.






