தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் நுழைந்து விசமிகள் செய்த செயல்! – பொலிசார் விசாரணை

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் அத்துமீறி பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06.08.2022 அன்று காணி உரிமையாளர் இல்லாத சமயத்தில் அத்துமீறி அடாத்தாக 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், 161க்கு மேற்பட்ட கமுகம் மரங்களும், பலாமரங்கள் என பல பயன்தருமரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இது விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் கிளிநொச்சி மற்றும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply