காலி பெந்தோட்ட பிரதேசத்திலுள்ள தேசிய பாடசாலையொன்றில் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில், 51 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 17 மாணவர்களுகு;கு தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது.
அளுத்கம, பெந்தொட்ட, ஊருகஸ்மங்ஹந்திய மற்றும் கொஸ்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே தொற்று உறுதிசெயப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என பெந்தொட்ட இந்துருவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
பாடசாலையில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொதுசுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






