சட்டத்துக்கு புறம்பாக மதுபான விற்பனையகங்கள் அமைக்கப்படவில்லை! செஹான் சேமசிங்க

பெருந்தோட்டப்புறங்களை மையப்படுத்தி மதுபான விற்பனையகங்கள் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று நாடாளுமன்றத்தில் தொடுத்த கேள்விகளின்போதே செஹான் சேமசிங்க இந்த பதிலை வழங்கினார்.

பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளில் பெருந்தோட்டப் புறங்களை மையப்படுத்தி மதுபான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மஹியங்களை பிரதேசம் பாரிய பிரதேசமாக இருக்கின்றபோதும் அங்கு 9 மதுபான விற்பனையகங்கள் மாத்திரமே உள்ளன.

எனினும், பசறை, ஹப்புத்தளை, பதுளை, போன்ற இடங்களில் குறிப்பாக கிக்கட்டிகல, அம்பிட்டிக்கந்த மற்றும் பூனாகல போன்ற தோட்டங்களுக்கு அருகிலும் ஹொப்டன் தோட்டத்திலும் மதுபான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது பெருந்தோட்டத்துறையை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகிறதா? என்று வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பினார்.

மதுபான விற்பனையகங்கள், பெருந்தோட்டப்புறங்களில் அமைக்கப்படுவதால், பெருந்தோட்ட இளைஞர்கள் மதுபான பாவனைக்கு உந்தப்படுகின்றனர். இதனால் கலாசார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டார்.

Leave a Reply