யாழ்ப்பாணம் வடமராட்சி மீனவர்களுடன் மீன்பிடிக் சென்ற நிலையில் கரைதிரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்ட 15 மீன்பிடிப் படகுகளும் கரை திரும்பியுள்ளன.
பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பினால் பல மீனவர்களின் மீன்பிடி வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் கடற்தொழிலிற்காக பிற்பகல் 3 மணிக்கு பின்னர் செல்வது வழமை.
எனினும்இ நேற்றைய தினமும் கடலுக்கு பிற்பகல் 3 மணியளவில் அனைத்து படங்களும் சென்ற பின்னரே கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில்இ கடலிலிருந்து கரைக்கு திரும்ப முடியாமல் பல இன்னல்களுக்கு மத்தியில் இன்று பிற்பகல் நான்கு முப்பது மணி அளவில் வடமராட்சி பருத்தித்துறை முனையை கொட்டடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த அனைத்து படங்களும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளன.
அத்துடன்இ இரண்டு படகுகளில் இயந்திரங்கள் பழுது அடைந்த நிலையில் அருகிலுள்ள படைகளின் உதவியுடன் கரை சேர்ந்திருக்கின்றன.
அதேவேளைஇ 3 படகுகளில் வலைகள் கடலில் காற்றினால் அடித்து செல்லப்பட்டள்ளன.
மேலும்இ ஒரு வகையான கடற்றாவரமொன்று பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் வரை கரையொதிங்கியுள்ளது.
இதன் காரணமாகஇ கரையில் வலைகளை ஏற்றி இறக்கவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் சூழலை பாதிக்க கூடிய வகையில் காணப்பட்டதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






