சீரற்ற காலநிலைக் காரணமாக புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நுரைச்சோலப் பகுதியில் இன்று பிற்பகல் பாரிய மரம் ஒன்று முச்சக்கர வண்டியின் மேல் சரிந்துள்ளது.
இதையடுத்து, முச்சக்கர வண்டியின் பின்புரம் கடுமையாக சேதமாகியுள்ளது.
எனினும், முச்சக்கர வண்டியின் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதன்போது சுமார் 2 மணித்திதாலங்கள் வரை போக்குவரத்து ஸ்தம்மிதமடைந்தது.
இதனை நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்ததுடன் உள் வீதிகளினூடாக வாகனப்போக்குவரத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்த நிலையில், சிரமத்திற்கு மத்தியில் மரத்தை அகற்ற நடவடிக்கையெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






