நாட்டில் காணப்படும் கொரோனா சவால்களை வெற்றி கண்டு, மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள ன.
அதன்படிஇ எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை மிகவும் வலுவானதாகச் சமர்ப்பிப்பதற்கு பஸில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இம்முறை வரவு – செலவுத் திட்டம் தயாரிப்பின்போதுஇ பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாகஇ நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன.
கொரோனா சவால்களை வெற்றிகொண்டுஇ மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டுஇ எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது .
இதேவேளைஇ கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






