புத்தளம் மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளது.
புத்தளம் நகரின், கடையாக்குளம், நூர்நகர், மணல்குன்று, தில்லையடி, அல்ஜித்தாஹ், ரத்ம்லயாய, புத்தளம் மன்னார் வீதி, பாலாவி குவைட் முகாம், மற்றும் நாகவில்லு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன்போது வீடுகளுக்குள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.











