<!–
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதிவரை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த குளிர்காலக் கூட்டத்தொடர் 20 அமர்வுகளாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் லக்கிம்பூர் வன்முறை, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் உள்ளிட்டவை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. ஆகவே இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குறித்த கூட்டத்தொடர் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






