
ஜே.கே.யதுர்ஷன்
மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் பெண்கள் அணி முதலிடம் பெற்றுள்ளது.
33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாரை மாவட்ட பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் பெண்களுக்காண கிரிகட் போட்டியில் திருக்கோவில்,பிரதேச பெண்கள் முதல் இடத்தை பெற்றனர்.
இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாறை பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் அம்பாறை மாவட்டதில் இருந்து மூன்று அணிகள் பங்கு பற்றின அவ் மூன்று அணிகளில் திருக்கோவில் பிரதேச பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
மேலும் இவ் அணியினர் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட கிரிக்கெட் போட்டில் விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
மேலும் இவ் போட்டியானது முதல் சுற்றுப்போட்டியில் முதல் சுற்றுப்போட்டியானது கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பெண்களுக்கு உஹனை பிரதேச பெண்களுக்கும் இடம்பெற்ற இச் சுற்றுப்போடியில் உஹகனை பிரதேச செயலகப்பெண்கள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகி மேலும் உஹனை பிரதேச செயகப்பெண்களுக்கும் திருக்கோவில் பிரதேச செயலகப்பெண்களுக்கும் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் திருக்கோவில் பிரதேச பெண்கள் முதல் இடத்தை பெற்றனர்…
இவ் அணிக்கு தலைமைதாங்கி சென்ற அம்பாறை மாவட்ட திருக்கோவில் இளைஞர் சேவைகள் அதிகாரி .கு.பிரபாகரன் ,மக்கள் சேவை ஒன்றிய தலைவர்.பி.நிஷாந்தன் மற்றும் விளையாட்டு பயிற்சிவிற்பாளர் N.லவகேஸ்வரன் ஆகியோர் இந் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்..
உஹணை பிரதேச செயகபெண்கள் அணியினர்2இடத்தையும்
கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பெண்கள் 3ஆம் இடத்தையும்…
பெற்றுக்கொண்டனர்.






