சில்லறை கடையில் தீவிபத்து: ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பலி

அனுராதபுரம் – மின்னேரியா- யாய 5 பிரதேசத்தில், சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மரணமடைந்தார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 71 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நபரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply