இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இயற்கை அனர்த்தங்களினால் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று(செவ்வாய்கிழமை) வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply