தமிழர், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எங்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
- -என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பி வருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தனை முன்னிலைப்படுத்தி ஒற்றுமை விவகாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு இடையில் கருத்தொற்றுமை, இணைந்த செயல்பாட்டை எம்மை சார்ந்தவர்கள் எதிர்
பார்க்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனை முன்னிலைப்படுத்தி ஒற்றுமை விவகாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் தமிழரின் பிரச்னையைதீர்க்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
சிறுபான்மையினரின் பிரச்சனைகளை வைத்து அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.
பெரும்பான்மையினர் சிறுபான்மை மக்களுக்கு விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும்.
மட்டக்களப்பில் பெரும்பான்மையினராக உள்ள தமிழர்கள் முஸ்லிம்களுக்கு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுப்பை செய்ய வேண்டும்.
இதேபோன்று முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தமிழர்களுக்கு விட்டுக் கொடுப்பு செய்ய வேண்டும்.
தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டால் கிழக்கு முதலமைச்சர் பதவி எமக்கே – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






