யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதியினூடாக பயணித்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கைதடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் குடைசாய்ந்துள்ளது.
இவ் வாகனத்தில் எட்டுப்பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வாகனத்தில் இரண்டு சிறார்கள் உட்பட எட்டுப்பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







