இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றி கண்ட முதலாவது நாடாக இலங்கை திகழ போகின்றது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உரம் தொடர்பில் பொய் பிரசாரம் செய்து வருகின்றது. ஆகவே, அவர்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவை அவர்கள் வைத்துக்கொள்ளலாம்.
நாம் இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு வழங்கி விட்டோம். விவசாயிகள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், தற்போது உள்ள நாட்டின் எதிர்க்கட்சி, நாம் கமிசன் பெறுவதாகவும், மக்களை கொல்ல போகின்றோம் என கூறி வருகின்றார்கள். மக்களை தூண்டி விட்டு திசை திருப்புகிறது.
அத்துடன், ஒருபோதும் சீனாவின் பற்றீரியா உரம் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






