பரந்தனில் பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் பலி!

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்தனர்.

குறித்த இருவரில் ஒருவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நேற்று விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply