
இனிவரும் தினங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை இடருக்கும் முகங்கொடுப்பதுக்கு மத்திய நிலையம் தயாராக இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் எந்தப் பகுதியிலும் இடர் நிலைமை ஏற்பட்டால் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 24 மணி நேர சேவையான 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்குத் தெரிவிக்க முடியும். என்றார்.





