மஹாஓயா பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக கிரிவுல்ல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் குருநாகல் – கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.






