கல்குடாவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் பட்டியடிச்சேனை தாமரைகுளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டியடிச்சேனை தாமரைகுளம் பகுதியில் கசிப்பு காய்ச்சுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட முற்றுகையின்போதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து, 3000 மில்லி லீற்றர் கசிப்பு, 4750 மில்லி லீற்றர் கோடா மற்றும் தளபாட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரை, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 45,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு, சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply