யாழில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் தீ விபத்து!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று பிற்பகல் கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதம், வவுனியா தாண்டிக்குளத்தை அண்மித்தபோது புகையிரதத்தின் கொட்பொக்ஸ் பகுதியில் தீ பிடித்துள்ளது.

இதனை அவதானித்த புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயிணைக் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைந்தனர்.

இதனையடுத்து புகையிரதத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணித்தியாலய தாமத்தின் பின் குறித்த புகையிரதம் கொழும்பு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

Leave a Reply