வடக்கில் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply