யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்தம் முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், பல குடும்பங்கள், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நல்லாட்சி அரசால் சஜித் பிரேமதாஸவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பல வீடுகள், அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வசிக்கின்ற தற்காலிக கொட்டில்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதனால், மக்கள், வீடுகளில் வசிக்க முடியாமல், உணவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வீட்டுத்திட்டத்தை முழுமை செய்து தர வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கில், பல பல வீடுகளை சூழ, வெள்ளம் தேங்கியுள்ளது. அதன் காரணமாக, மணல் மண்ணை பறித்து, மழை நீர் தேங்காமல் செய்வதற்கு உதவி செய்யுமாறும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









