யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் வசிக்கின்ற கொட்டில்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், மக்கள், வீடுகளில் வசிக்க முடியாமல், உணவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை எந்த உதவியும் தங்களுக்கு செய்து தரப்படவில்லை என்றும் குழந்தைகளுக்கு உணவு கூட வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அங்கு பல வீடுகளை சூழ, வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், மழை நீர் தேங்காமல் செய்வதற்கு உதவி செய்யுமாறும், உணவுகளை வழங்குமாறும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






