குருநாகலில் மண்சரிவு: இருவர் பலி!

குருநாகல், ரிதிகம பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் இருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை, ரஸ்னகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் தந்தையொருவரும் அவரது மகனும் காணாமல் போயுள்ள நிலையில் தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, குருநாகலை – உடுபத்தாவ பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply