கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றுக் காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்று மாயமானதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் இவர்களை தேடி வந்த நிலையில், குறித்த மூவரும் வீடு திரும்பியுள்ளதாக அறியமுடிகிறது.







