இலங்கையின் மொத்த ஒதுக்கம் ஜூலையில் 1.8 பில்லியன் அமெ. டொலர்

கொழும்பு, ஓக 18

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் மொத்த ஒதுக்கம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலராகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சீன மக்கள் வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்  பணப்பரிமாற்ற வசதியும் அதில் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம் மட்ட உடன்பாட்டுக்கான நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply