ஸ்ரான்லி வீதி அகலிப்பிற்காக உடைக்கப்பட்ட சிறீதர் தியட்டர் முன்பாக இருந்த பூந்தொட்டி மீள அமைத்து ஒரு வாரத்தில் வீழ்ந்தது.
ஸ்ரான்லி வீதியை அகலித்து போக்கு வரத்திற்கு இலகுவான இட வசதியை ஏற்படுத்தவென மாநகர சபை திட்டமிட்டபோது அதனை நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்பந்தகாரர் அனுமதி பெறாமல் உடைத்தார் என்ற அடிப்படையில் இந்த பூந்தொட்டி மீள அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இருந்தபோதும், கடந்த இரு நாட்களாக பொழியும் கன மழையின் காரணமாக அடியோடு உடைந்து வீழ்ந்துள்ளது.







