அமைச்சர் கெஹெலியவின் வீட்டுக்கு தீ வைப்பு தொடர்பில் மூவர் கைது!

அமைச்சசர் கெஹெலிய றம்புக்வெல்லவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீயிட்டு சேதம் விளைவித்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மேமாதம் 9ம் திகதி காலிமுகத்திடல் சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் போதே மேற்படி தீ வைப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.

மேலும், கண்டிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் முல்கம்பல, ஈரஸ்ஸகல மற்றும் விகார மாவத்தை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply