சீரற்ற காலநிலையால் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கிண்ணியா, உப்பாறு பகுதியில் மூன்று மின் தூன்கள் விழுந்துள்ளன.
கனமழை காரணமாக 33,000 மின் பவர் கொண்ட தூண்களே இவ்வாறு கீழே விழுந்துள்ளதுடன் கிண்ணியா மூதூருக்கான மின் தடை ஏற்பட்டு சில மணி நேரங்களில் வழமைக்கு திரும்பியுள்ளன.
அடை மழை காரணமாகவும் கடல் அலையின் சீற்றம் காரணமாகவும் இம் மின் தூண்கள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
அப்பகுதி கரையோரம் கடல் அரிப்புக்கு உட்படுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் மழை நீரினால் மூடப்பட்டுள்ளது






