நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார் .
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்த கருத்துக்கு எதிராகவே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காலை 9.15 அளவில் வந்த அமைச்சர், இன்னமும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.






