மசகு எண்ணெய் இறக்கும் பணி ஆரம்பம்; சப்புகஸ்கந்த நிலையப் பணிகளும் தொடங்கும் சாத்தியம்!

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் எண்ணெய் இறக்கும் பணி இன்று (18) முதல் தொடங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக்கொண்டு குறித்த கப்பல் நேற்று (17ஆம் திகதி) இரவு நாட்டை வந்தடைந்தது.

அதன் ஆய்வுக்குப் பிறகு இன்று முதல் மசகு எண்ணெய் இறக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் இந்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் வரும் 23 மற்றும் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மசகு எண்ணெய்க் கப்பல்களும் ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பிற செய்திகள்

Leave a Reply