யாழ்.பல்கலை அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டடம் திறந்து வைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி, அறிவியல் நகர் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் சம்பிரதாயபூர்வத் திறப்பு விழா இடம்பெற்றது.

அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்தக் கட்டடத் தொகுதியைக் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்த திறந்து வைக்கவிருந்த நிலையில் குறித்த நேரத்திற்கு கல்வி அமைச்சர் வருகைதராத காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இதேவேளை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வருகையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply