பிரித்தானிய பெண் மாயம்; CID தீவிர விசாரணை!

விசா ரத்து செய்யப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேஸரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, குடிவரவு குடியகல்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு அத்திணைக்களம் குறித்த பிரித்தானிய பெண்ணுக்கு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு அவர் விடுத்த கோரிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலி முகத்திடல் போராட்ட களத்தின் சம்பவங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாக இந்த யுவதி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவர் தற்போதுவரை நாட்டை விட்டு வெளியேறாத நிலையில், அவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply