யாழிலிருந்து சென்ற ரயிலில் பற்றியது தீ!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட ரயில் வவுனியாவை அணமித்தபோது திடீரென தீ ஏற்பட்டது. எனினும், ரயில் ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுப்பிற்பகல் புறப்பட்ட கடுகதி ரயில் வவுனியா, தாண்டிக்குளத்தை அண்மித்தபோது ரயிலின் ‘கொட்பொக்ஸ்’ பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதனை அவதானித்த ரயில் ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அணைந்தனர்.

இதனையடுத்து ரயிலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணித்தியால தாமத்தின் பின்னர் குறித்த ரயில் கொழும்பு நோக்கிய பயணத்தை தொடர்ந்தது.

Leave a Reply