பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டா அடுத்த வாரம் நாடு திரும்புவார்?

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு இராஜதந்திர வழிகள் மூலம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் நாடு திரும்புவதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியபடி நாட்டுக்கு வரலாம் அல்லது போகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply