பள்ளி வகுப்பறையில் சகமாணவிக்கு தாலி கட்டிய மாணவன் – அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சகமாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலை பள்ளி.

இந்த பள்ளியில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் தாலி கட்டியுள்ளார்.

மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர்.

இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் செல்போணில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply