அதிபர் – ஆசிரியரின் போராட்டம்: தீர்வு வழங்க நிதியமைச்சர் இணக்கம்

அதிபர் – ஆசிரியர் சேவைக்கான உத்தேச சம்பளத்தை மூன்றில் ஒரு பகுதியை 2022 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் ஊடாக ஒரே தடவையில் வழங்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம் பெற்றது.

அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைக்கு அமைய ஆசிரியர் – அதிபர் சேவையில் முதற்கட்டமாக 11 ஆயிரத்து 828 ரூபாயினால் சம்பளம் அதிகரிக்கப்படும்.

ஆனால் சுபோதினி குழு பரிந்துரையில் முதற்கட்டமாக சம்பளத்தை 31,000 ஆயிரத்தினால் அதிகரிக்க குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சுபோதினி குழு அறிக்கையை முழுமையாக செயற்படுத்தும் வரையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம் தொடரும்.

அமைச்சரவை உபகுழுவில் குறிப்பிடப்பட்ட ஏனைய பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply