சப்புகஸ்கந்த பகுதியில் பணயப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேகநபர் நேற்று வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மாளிகாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைத் தொடர்பில், ஏற்கனவே மட்டக்குளியப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






