வீட்டு முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மோட்டார் சையிக்கிளைப் பட்டப்பகலில் திருடிக்கொண்டு அதிவேகத்தில் பயணித்தவர் வீதிவிபத்தில் சிக்கியுள்ளார்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை முசுரம்பிட்டி பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.
கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை தருமபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இதே பகுதியில் வீட்டில் நிறுத்தி வைத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை களவாடி ஒழித்து வைத்திருந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸாரால் பிடிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றபின், குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






