புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாய பகுதியில் மூன்று இடங்களில் வீதி தாழ் இறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியதுடன், புத்தளம் தொடக்கம் மங்கள எளிய வரை 4 அடிக்கும் மேல் வெள்ளநீர் மேவிப் பாய்ந்தன.
இதனால், குறித்த வீதியின் மூன்று இடங்களில் வீதி சிதைவடைந்து தாழிறங்கி பாரிய குழிகளாக காணப்படுகின்றன.
குறித்த வீதி தாழ் இறங்கியமையால் ரத்மல்யாய பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்றது.
எனினும், புத்தளம் போக்குவரத்து பொலிஸார் அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் கட்டளைகளுக்கு அமைய வாகனங்கள் பயணம் செய்து வருகின்றது.
இதேவேளை, தாழிறங்கிய வீதியை திருத்தும் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் நேரடி கண்காணிப்பில் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.








