எரிபொருள் விலை உயர்வு டிசெம்பர் 10இல் முடிவு!

“உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்படாத ஒரே நாடு இலங்கையாகும். எனினும், எதிர்காலத்தில் எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதா அல்லது இல்லையா என்பது நிதி அமைச்சின் கைகளிலேயே உள்ளது.”- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக சந்தையில் கடந்த 5 மாதங்களில் எரிபொருள்களின் விலை 27 வீதத்தால் அதிகரித்துள்ளது. எமது நாட்டு மக்கள் பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதாலேயே நாம் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை. எனினும், எதிர்காலத்தில் அந்த சுமையை மக்களே தாங்கிக்கொள்ள நேரிடும்.

இந்தமாதம் பாதீடு முன்வைக்கப்படவுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு நிவாரணம் வழங்குவதா அல்லது எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதா அல்லது எரிபொருள்கள் மீதான வரியை குறைப்பதா என்பதனை நிதி அமைச்சரே தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.

Leave a Reply