முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
நஷனல் பி வி சி நிறுவனத்தின் உதவியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த குடிநீர் திட்டங்கள் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (10) இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலை , கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலை , மாமடு பழம்பாசி அரசினர் தமிழக் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளுக்கே, குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
கூழாமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை முதல்வர் கனகசபாபதி சபாயிதன் தலைமையில் இடம்பெற்றது
கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில், பாடசாலை முதல்வர் நற்குணம் சர்வேஸ்வரநாதன் தலைமையிலும், மாமடு பழம்பாசி அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில், பவளகாந்தன் காந்தசீலன் தலைமையிலும் குடிநீர் திட்டம் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுகளில் 64 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் யூ.பி.ஆர் வீரகோன், 642 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளை தளபதி கேணல் ஜி.டி.எஸ் மேதங்க அல்விஸ் நஷனல் பி வி சி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு முகாமையாளர் சப்புமல் கேரத் ,நஷனல் பி வி சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு குறித்த குடிநீர் திட்டங்களை மாணவர்களின் பாவனைக்கு கையளித்தனர்






