யாழ். மாவட்ட பாடசாலைகளை நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில், தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு, நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போதைய நிலைமைகள் ஓரளவுக்கு சீராகியுள்ளது.

எனினும், பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் மேலதிகமான எந்த தீர்மானங்களையும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை என்றார்.

Leave a Reply