புத்தளத்தில் திடீரென தாழிறங்கிய வீதி!

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் மூன்று இடங்களில், வீதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக என்றும் இல்லாதவாறு இம்முறை புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம்- மங்கள எளிய வரை 4 அடிக்கும் மேல் வெள்ளநீர் மேவிப் பாய்ந்தன.

இதன் காரணமாகவே குறித்த வீதியின் மூன்று இடங்களில் வீதி சிதைவடைந்து தாழிறங்கி பாரிய குழிகளாக காணப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த வீதி தாழ் இறங்கியமையால் ரத்மல்யாய பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்றன.

எனினும், புத்தளம் போக்குவரத்து பொலிஸார் அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கட்டளைகளுக்கு அமைய வாகனங்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதேவேளை, தாழிறங்கிய வீதியை திருத்தும் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply