யாழில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 188 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 823 நபர்கள், தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 110 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு தற்போது 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 96 குடும்பங்களை சேர்ந்த 308 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்-என்றார்.

Leave a Reply